காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் மகேஷ்குமார் போட்டியிடுகிறார். இன்றுடன் தேர்தல் பரப்புரை முடிவடைவதையொட்டி மகேஷ்குமார் அனல்பறக்கும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டனர்.
அந்தவகையில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், நடுத்தெரு, கிருஷ்ணன் தெரு, மடம் தெரு உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நகரின் முக்கியப் பகுதிகளில் பாமக வேட்பாளர் மகேஷ்குமாரை ஆதரித்து அதிமுக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளரும், உத்திரமேரூர் அதிமுக வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான வி. சோமசுந்தரம் தீவிர பரப்புரை மேற்கொண்டனர்.
அப்போது நெசவாளர்கள் பட்டு பாவு காய வைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்த மகேஷ்குமார் அவர்களுக்கு உதவிபுரிந்தார். பின் தன்னை வெற்றி பெறவைக்குமாறு அங்கிருந்த நெசவாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
மேலும் நெசவாளர்களுக்கு அரசின் அனைத்துத் திட்டங்களும் விரைவில் கிடைக்க வழிவகைச் செய்வேன் எனவும், நீண்டநாள் கோரிக்கையாக இருக்கும் பட்டுப் பூங்கா விரைவில் தொடங்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படும் என உறுதி அளித்தார்.