காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் வசிப்பவர் ஏழுமலை (28). லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சசிகலா (25). இவர்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனர். ஏழுமலை தினசரி குடித்துவிட்டு வந்து வீட்டில் சண்டைப் போடுவது வழக்கம். இந்நிலையில், நேற்றிரவும் (பிப்.21) ஏழுமலை குடித்து விட்டு மனைவியுடன் சண்டை போட்டுள்ளார்.
அப்போது இருவருக்கும் வாக்கு வாதம் முற்றியதாகத் தெரிகிறது. ஆத்திரமடைந்த ஏழுமலை வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து சசிகலாவின் கழுத்தை அறுத்துள்ளார். இதில் சசிகலா சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த உத்திரமேரூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சசிகலாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் ஏழுமலையை கைது செய்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.