சென்னையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் 50ஆம் ஆண்டு நிகழ்ச்சியில் பெரியார் குறித்து ரஜினி கூறிய கருத்துகள், தமிழ்நாடு அரசியலில் பரபரப்பான விஷயமாக பேசப்பட்டுவருகிறது. நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கு ஆதரவாக பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்ட இந்து மத அமைப்புகள் ஆதரவு தெரிவித்தன.
இது ஒருபுறமிருக்க ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக, அதிமுக, திக உள்ளிட்ட கட்சிகள் எதிராகக் கருத்து கூறிவருகின்றன. இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த களியப்பேட்டை பகுதியில் பெரியார் சிலையை சமூகவிரோதிகள் சேதப்படுத்தியுள்ளனர்.
பெரியார் சிலையை உள்ளூர் மக்கள் யாரும் சேதப்படுத்த வாய்ப்பில்லை என அப்பகுதி கிராமவாசிகள் தெரிவித்தனர். எனவே சிலையை சேதப்படுத்தியது வெளிப்பகுதியைச் சேர்ந்த நபர்களாக இருக்கக்கூடும் எனவும், கிராம மக்கள் சந்தேகிக்கின்றனர். சிலையை சேதப்படுத்திய நபர்களைக் காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'பெரியார் ஒரு மின்சாரம் தொட்டால் ஷாக்கடிக்கும்' - கி.வீரமணி