காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே போந்தூரில் தனியாருக்குச் சொந்தமான பெட்ரோல் பங்க் ஒன்று உள்ளது. இங்கு காரில் வந்த இருவர் ஆயிரத்து 800 ரூபாய்க்கு டீசல் நிரப்பிவிட்டு, பணம் தராமல் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, காரில் தப்பி சென்ற இருவரை காவல்துறையினர் துரத்தி பிடித்தனர். அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஒருவர் மாங்காட்டை சேர்ந்த ஹஸன் (40) மற்றொருவர் சிங்கபெருமாள்கோவிலை சேர்ந்த அப்துல்லா (30) என்பது தெரியவந்தது. இருவரும் கூடுவாஞ்சேரியில் வேணுகோபால் என்பவருக்குச் சொந்தமான காரை திருடி வந்ததும் தெரியவந்தது.
இதனைத்தொடர்ந்து, இருவரும் எங்கெல்லாம் இதுபோல் கார் திருட்டில் ஈடுபட்டுள்ளனர் என்பது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட வேண்டும் - சு. வெங்கடேசன் எம்பி