காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்ததது. இதனால், பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டத்திலுள்ள 909 ஏரிகளில் 540 ஏரிகள் முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 218 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 322 ஏரிகளும் அடங்கும்.
காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஒருங்கிணைந்த மாவட்டங்களில் 16 ஏரிகள் மிகப்பெரிய ஏரிகளாக உள்ளன. இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதன்மையானதாக தென்னேரி ஏரி உள்ளது. இந்த ஏரியின் 18 அடி ஆழத்தில் 1 டி.எம்.சி தண்ணீரை தேக்க முடியும். ஏரியின் மொத்தமுள்ள 18 அடியும் தற்போது நிரம்பி ஏரி முழு கொள்ளளவை எட்டியுள்ளன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியான 18.60 அடி ஆழம் கொள்ளவு கொண்ட தாமல் ஏரியில், 14.50 அடி ஆழத்திற்கு நீர் நிரம்பி உள்ளது. அதேபோல், 20 அடி கொள்ளளவு கொண்ட உத்திரமேரூர் பெரிய ஏரியில் 9.50 அடி நீர் நிரம்பி உள்ளது.
17.70 அடி ஆழம் கொண்ட ஸ்ரீபெரும்புதூர் ஏரியில் 17.17 அடி நீர் நிரம்பி உள்ளது. 18.40 அடி கொள்ளவு கொண்ட மணிமங்கலம் ஏரி முழு கொள்ளவை எட்டியுள்ளது.
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டதில் 335 ஏரிகள் 75விழுக்காடு கொள்ளளவையும், 140 ஏரிகள் 50விழுக்காடு கொள்ளளவையும், 31 ஏரிகள் 25விழுக்காடு கொள்ளளவையும் எட்டியுள்ளன எனப் பொதுப்பணி துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தடுப்பணைகளை சரிசெய்வதாக வர்ணம் பூசும் பொதுப்பணித்துறை!