ஸ்ரீபெரும்புதூர் அருகேயுள்ள செட்டிபேடு பகுதியைச் சேந்தவர் வடமாநில இளம்பெண் சுங் சூய் மொய் (22). இவர், அப்பகுதியில் உள்ள மசாஜ் சென்டரில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 4 ஆம் தேதி இரவு சாப்பிட்டுவிட்டு துாங்கியவர் காலை உயிரிழ்ந்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் கிபாரூல் ஸ்லாம் (21). இவர், ஸ்ரீபெரும்புதுார் அடுத்த வல்லம் பகுதியில் தங்கி அதே பகுதியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் பாதுகாவலராக பணிபுரிந்து வந்தார். கோழிக்கறி சாப்பிட்டு காய்ச்சல், மூச்சி திணறல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட அறிகுறிகளுடன் ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
இதேபோல், கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர் திலீப் சத்தார் (35). இவர், ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம் மேட்டுப்பாளையம் ஊராட்சியில் தங்கி ஒரகடம் சிப்காட்டில் பணிபுரிந்து வந்தார். இவர் மீன் குழம்பு சாப்பிட்டு வயிற்றுப்போக்கு, மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
அதே போல், கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி மேற்குவங்கம் மாநிலத்தைச் சேர்ந்தவர் குபின் சந்த் மண்டல் (39). இவர், ஸ்ரீபெரும்புதுார் அருகே ஒரகடம் அடுத்த குண்ணவாக்கம் பகுதியில் தங்கி பணிபுரிந்து வந்தார். நேற்று முன் தினம் இரவு முட்டை சாதம் சாப்பிட்டு துாங்கியுள்ளார். பின் நேற்று காலை மயங்கிய நிலையில் இருந்துள்ளார்.
இதையடுத்து, காவல் துறையினர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து ஏப்ரல் 30 ஆம் தேதி ஸ்ரீபெரும்புதுார் பேரூராட்சிக்குட்பட்ட கச்சிப்பட்டு, காமராஜர் நகரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவரது தாய் சொக்கம்மாள் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் எட்டு பேர் முலாம் பழம் ஜீஸ் குடித்ததால் வாயிற்று போக்கு வாந்தி ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளனர்.
இதில் சொக்கம்மாள் உயிரிழந்தார். அதைத் தொடர்ந்து, ஸ்ரீபெரும்புதூர் அருகே காட்டரம்பாக்கம் பகுதியில் கோழிக்கறி சாப்பிட்டு, வயிற்று போக்கு, மூச்சு திணறல் ஏற்பட்டு மேலும் ஒரு வடமாநில இளைஞர் உயிரிழந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:சொந்த ஊருக்கு அனுப்பக்கோரி தொழிலாளர்கள் போராட்டம்!