ETV Bharat / state

காஞ்சியில் கரோனா பரிசோதனை பணிகளை ஆய்வுசெய்த நகராட்சி ஆணையர் - காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர்

காஞ்சிபுரம்: பெருநகராட்சிப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் கரோனா சோதனைகள், தொற்று தடுப்புப் பணிகள் குறித்து நகராட்சி ஆணையர் ஆய்வுசெய்தார்.

காஞ்சிபுரம்
காஞ்சிபுரம்
author img

By

Published : Jun 10, 2021, 10:47 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த வாரம் வரை நாளொன்றுக்கு 1000-க்கும் மேற்பட்டோர் கரோனா நோய்த்தொற்றால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்றுவந்தனர்.

இந்நிலையில், தொற்றுப் பரவல் மெள்ள மெள்ள குறைந்து தற்போது மாவட்டம் முழுவதும் 300-க்கும் கீழ் நாளொன்றுக்கு தொற்றுப் பாதிப்பு குறைந்துவருகின்றது.

இந்நிலையில் காஞ்சிபுரத்தில் கரோனா நோய்த்தொற்று அதிகரிக்காமல் இருக்க காஞ்சிபுரம் பெருநகராட்சிப் பகுதிகளில் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி மேற்பார்வையில் வீடுதோறும் சுகாதாரப் பணியாளர்கள், சுகாதாரத் துறையினர் என ஐந்து பேர் கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டு வீடு வீடாகச் சென்று பொதுமக்களிடம் ஆக்சிஜன் பரிசோதனை, உடலின் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இதில் ஆக்சிஜன் அளவு 94 குறைந்தால் அவர்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி அவர்களுக்குத் தேவையான சிகிச்சையை அளிக்கும் பணிகளில் நகராட்சிப் பணியாளர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும் 90-க்கும் குறைவாக ஆக்சிஜன் அளவு இருந்தால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பும் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.

இப்பணியில் 250-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

காஞ்சிபுரம் பெருநகராட்சிக்குள்பட்ட பாவாப்பேட்டை தெரு, வழக்கறுத்தீஸ்வரர் கோயில் பகுதிகளில் நடைபெற்றுவரும் கரோனா பரிசோதனை பணிகளை இன்று நகராட்சி ஆணையர் மகேஸ்வரி நேரில் பார்வையிட்டு ஆய்வுமேற்கொண்டார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.