டாஸ்மாக் மதுபான கடைகளை இன்று முதல் திறக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதைத்தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா கட்டுப்பாடு மண்டலங்களாக உள்ள மதுபான கடைகளைத் தவிர்த்து 16 அரசு மதுபான கடைகளைத் திறக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது.
இதைத்தொடர்ந்து, குறிப்பிட்ட மதுபான கடைகளில் மதுப்பிரியர்கள் மதுபானங்களை வாங்கிச் செல்ல ஏதுவாகத் தடுப்புகள் அமைத்து காவல் துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுபானம் வாங்க வருபவர்கள் உள்ளூர் ஆட்களாக இருக்கவேண்டும் என்றும் அதனை நிரூபிக்கும் வகையில் அடையாள அட்டையையும் எடுத்து வரவேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அடையாள அட்டையுடன் வந்த பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட மதுப்பிரியர்கள் வரிசையில் நின்று மதுபாட்டில்களை வாங்கிச் செல்கின்றனர். மேலும், உள்ளூர் மக்களைத் தவிர சென்னை ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த யாராவது மதுபானம் வாங்க வந்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: போலி சித்த மருத்துவர் திருத்தணிகாச்சலம் கைது!