காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த கயப்பாக்கம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டுவருகிறது. இங்கே, கடந்த கல்வி ஆண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்த 83 மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்குவதாக இருந்தது.
இந்நிலையில், மாணவர்களுக்கு வழங்கவிருந்த மடிக்கணினியை தலைமையாசிரியர் தனி அறையில் வைத்துப் பூட்டியுள்ளார். விடுமுறை தினமான நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் கதவின் தாழ்ப்பாளை உடைத்து உள்ளிருந்த நான்கு மடிக்கணினிகளை மட்டும் திருடி, பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு முள்புதரில் வீசிச் சென்றுள்ளனர்.
மடிக்கணினிகள் திருடப்பட்டதைக் கண்ட தலைமையாசிரியர் அதிர்ச்சியடைந்துள்ளார். பின்பு, இது குறித்து காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அங்குவந்த காவல் துறையினர் பள்ளியில் சோதனை செய்தனர்.
அப்போது திருடப்பட்ட மடிக்கணினிகள் முள்புதர்களில் வீசியது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றிய காவல் துறையினர் மடிக்கணினி திருடிய நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஷேர் ஆட்டோவில் நகைகளைத் திருடும் பலே திருடிகள் கைது!