ETV Bharat / state

இரு சக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து - ஒருவர் உயிரிழப்பு! - Kanchipuram latest news

காஞ்சிபுரம்: மாமண்டூரில் இரு சக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

kanchipuram-road-accident
kanchipuram-road-accident
author img

By

Published : Oct 19, 2020, 3:18 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூரில் இருசக்கர வாகனத்தில் சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி சுமார் 100 அடி தூரத்திற்கு இழுத்து வரப்பட்டவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த படாளம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் பெயர் பூபாலன் என்பதும், இவர் கட்டியாம்பந்தல் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இச்சம்பவத்தால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சிவகளை அகழாய்வுப் பணி - தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணி தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.