தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2020ஆம் ஆண்டு நவம்பர் 21, 22, டிசம்பர் 12,13 ஆகிய தேதிகளில் புதிய இளம் தலைமுறை வாக்காளர்கள் சேர்க்கை சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. இதில் இளம் தலைமுறை வாக்களர்கள் தங்களை இணைந்து கொண்டு ஒப்புகை சீட்டு பெற்று சென்றனர்.
இந்நிலையில், இவர்களுக்கான வாக்காளர் அடையாள அட்டை நகல் பிரதி வழங்கும் சிறப்பு முகாம் மாவட்டம் முழுவதும் இன்று வாக்குபதிவு மையங்களில் நடைபெற்றது. இதில் காஞ்சிபுரம் கோட்டத்திற்கு உட்பட்ட வாக்குபதிவு அலுவலரின் கீழ் 795 மையங்களில் நடைபெறும் சிறப்பு முகாம்களை வருவாய் கோட்டாட்சியர் பெ.ராஜலட்சுமி பார்வையிட்டார்.
அந்தவகையில் காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு முகாமில் அவர் புதிய இளம் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை நகல் பிரதியை வழங்கினார். மேலும் இளம் தலைமுறை வாக்காளர்கள் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: 'திமுக கொள்ளையடிப்பதற்கு தான் முக்கியத்துவம் கொடுக்கும்' - எல்.முருகன் காட்டம்