காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாசத்திரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் திருவள்ளூர் மாவட்டம் புதுச்சத்திரம் மற்றும் திருப்பாச்சூர் அருகே ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர் .
இதனையடுத்து அங்கு பணிபுரியும் பெண்களில் நேற்று முன்தினம் வயிற்று உபாதை மற்றும் மயக்கத்தினால் 600க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலையை தனியார் நிறுவனம் விலக்கவில்லை என்பதை வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட பெண்கள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தொழில் துறை அமைச்சர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இந்நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை கைவிட செய்தனர்.
ஆனால் சிகிச்சை பெற்று வந்த பெண்கள் உயிரிழந்ததாகவும் அது குறித்து தனியார் நிறுவனம் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என்பதை வலியுறுத்தி திருப்பாச்சூர் தனியார் கல்லூரியில் தங்கியிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் நிறுவன பெண்கள் திருவள்ளூர் திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவர்களுடன் காவல்துறை அதிகாரிகள் சமாதான பேச்சில் ஈடுபட்டதை தொடர்ந்து தனியார் நிறுவன பெண்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின்பு சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
இதனால், சுமார் இரண்டு மணி நேரத்துக்கு மேலாக திருப்பதி திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகன நெரிசல் ஏற்ப்பட்டது. பின்னர் காவல் துறையினர் நெரிசலை சீர்படுத்தினர்.
இதையும் படிங்க:மதுக்கடையை மாற்றக் கோரிய வழக்கு: அறிக்கைத் தாக்கல்செய்ய உத்தரவு