காஞ்சிபுரம் அடுத்த முத்தியால்பேட்டை இந்திரா நகரைச் சேர்ந்தவர் காமராஜ் இவரது மகன் ஜெகன் (வயது 20) அதே பகுதியைச் சேர்ந்த வேல் முருகன் என்பவரின் மகன் சந்தோஷ் (20), ஆகிய இருவரும் இருசக்கர வாகனத்தில் காஞ்சிபுரம் நோக்கி சென்றுள்ளார்கள்.
அப்போது நசரத்பேட்டை அருகில் முன்னே சென்ற கனரக லாரியை முந்திச் செல்ல முயன்றுள்ளனர். எதிர்பாராதவிதமாக லாரியும் இருசக்கர வாகனமும் மோதியதில் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
விபத்து குறித்து அறிந்த காஞ்சிபுரம் தாலுக்கா காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான இளைஞர்களின் உடலை மீட்டு உடற்கூறாய்விற்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் காவல் துறையினர் தப்பியோடிய லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர். ஒரே பகுதியைச் சேர்ந்த நண்பர்கள் இருவரும் பலியான சம்பவம் இந்திராநகர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: காஞ்சிபுரத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் தற்கொலை முயற்சி!