காஞ்சிபுரம் மாவட்டத்தில் நியாய விலைக்கடைகளில் விற்பனையாளர், கட்டுநர் உள்ளிட்ட பதவிகளுக்கான காலிப் பணியிடங்களை நிரப்ப இன்று நேர்முகத் தேர்வு நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளில் 126 விற்பனையாளர், 64 கட்டுநர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், தகுதி உடையோர் விண்ணப்பங்களை பெற்று விண்ணப்பிக்குமாறும் கூட்டுறவு துறை சார்பாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்தப் பணியிடங்களுக்காக சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் தகுதியுடைய விண்ணப்பதார்களுக்கான நேர்முகத்தேர்வு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக எதிரேயுள்ள கூட்டுறவு வளாகத்தில் இன்று தொடங்கியது. டிசம்பர் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த நேர்முகத் தேர்வுக்காக 20 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 500 நபர்கள் அழைக்கப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முக தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பதாரர்கள் உடல் வெப்பநிலை, சானிடைசர் மற்றும் தனிநபர் இடைவெளி என கரோனா தடுப்பு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தேர்வில் பங்கேற்றவர்களில் 80 விழுக்காட்டினர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இளம்பெண்கள் வீட்டில் அடைத்துவைக்கப்பட்ட விவகாரம்: காணொலி ஆதாரத்துடன் விளக்கிய அனிதா குப்புசாமி!