உலகப் பிரசித்திப் பெற்ற காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் 2019 ஜூலை 1ஆம் தேதிமுதல் ஆகஸ்ட் 18ஆம் தேதிவரை அத்திவரதர் வைபவம் நடைபெற்றது.
இதில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம்செய்தனர். அத்திவரதர் வைபவத்தின்போது விற்பனைசெய்யப்பட்ட டிக்கெட்டுகளில் முறைகேடு நடைபெற்றதாகப் புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக அறிக்கைத் தாக்கல்செய்ய இந்து சமய அறநிலையத் துறை ஆணையர் பிரபாகர் உத்தரவிட்டார்.
அதன்பேரில் திருவேற்காடு இணை ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் அறிக்கை தாக்கல்செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோயில் ஊழியர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: தொடர் மழையால் நிரம்பிய அத்திவரதர் குளம்!