காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே காயரம்பேடு ஏரி, கொண்டகை ஏரி ஆகிய இரு ஏரிகள் தூர்வாரப்பட்டு வருகின்றன. இதனை பொதுப் பணித்துறை அலுவலர்கள் இன்று ஆய்வு செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் மூலம் தூர்வாரப்பட்டு உள்ளன.
இதில் ஒவ்வொரு ஏரிக்கும் சுமார் 70 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மொத்தமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 36 ஏரிகளையும் தூர்வாரப்படுவதற்கு குடிமராமத்து திட்டத்தின் மூலம் 15 கோடியே 22 லட்சம் ஒதுக்கப்பட்டு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'பெரம்பலூரில் 14 ஏரிகளில் ரூ.3.48 கோடி மதிப்புள்ள சீரமைப்புப் பணி' - மாவட்ட ஆட்சியர் தகவல்!