ETV Bharat / state

பிரபல ரவுடியின் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்கள் கைது!

காஞ்சிபுரத்தில் பிரபல தாதாவாக வலம் வந்த ரவுடி ஸ்ரீதர் தனபாலின் உறவினரான கிரிதரன் நண்பர்களால் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

in Kanchipuram friends killed the famous rowdy relative and threw him in a well were arrested

author img

By

Published : Jul 15, 2023, 11:40 AM IST

Updated : Jul 15, 2023, 11:49 AM IST

பிரபல ரவுடியின் உறவினரை கொலை செய்து கிணற்றில் வீசிய நண்பர்கள் கைது!

காஞ்சிபுரம்: பிரபல தாதாவாக வலம் வந்தவர், ஸ்ரீதர் தனபால். இவர் மீது காவல் துறையில் ஏராளமான வழக்குகள் இருந்து வந்தன. இவர் தாதா என்பது ஒருபுறம் என்றால், இவருடைய பெயரைப் பயன்படுத்தி ரவுடிசம் செய்யும் பல குட்டி தாதாக்களும் பலர் உருவாகி வந்தனர்.

ஒரு கட்டத்தில் ஸ்ரீதரின் அட்டகாசங்கள் எல்லை மீறவே அவரை காவல் துறையினர் துரத்தி துரத்தி வேட்டையாட ஆரம்பித்தனர். இதனால் ஸ்ரீதர் தலைமறைவானார். அதன் பின்னர் கம்போடியா நாட்டில் தற்கொலை செய்து கொண்டார், ஸ்ரீதர் தனபால்.

அவர் கதை முடிந்தாலும் அவர் பெயரைக் கூறிக்கொண்டு அட்டகாசம் செய்யும் சிலர் இன்றும் உள்ளனர். ஸ்ரீதரின் மனைவி குமாரி. 18 ஆண்டுகளுக்கு முன்பு குமாரியின் மூத்த சகோதரியான பாக்கியம் என்பவர் கொல்லப்பட்டார். அந்த பாக்கியத்தின் மகன் கிரிதரன். இவர் தன்னுடைய சகோதரி கிரிஜா என்பவரோடு பல்லவர் மேடு பகுதியில் வசித்து வந்தார். கிரிதரன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் அடிதடி உள்ளிட்ட 6 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில், இவர் தனது நண்பர்கள் ஹரீஸ் என்ற டியோ ஹரி (20), பிட்டா என்ற கார்த்திக் (18), ஆகாஷ் (18), மற்றும் தாமோதரன் (19) ஆகியோருடன் சேர்ந்து கடந்த ஜனவரி 13ஆம் தேதி புதுப்பாளையம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மது அருந்தியதாகக் கூறப்படுகிறது.

அப்போது மது போதையில் அவர்களுக்குள் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆகாஷ் மற்றும் பிட்டா கார்த்திக் ஆகிய இருவரும் சேர்ந்து அங்கிருந்து கல்லைத் தூக்கி கிரிதரன் மீது போட்டுள்ளனர். ரத்த வெள்ளத்தில் படுகாயம் அடைந்த கிரிதரன், உயிருக்கு போராடிய நிலையில் அங்கிருந்த மற்றொரு கல்லைத் தூக்கி கிரிதரன் மீது ஹரீஸ் போட்டதில் சம்பவ இடத்திலேயே கிரிதரன் உயிரிழந்துள்ளார்.

கிரிதரனின் உடலை யாரும் கண்டுபிடித்து விடக் கூடாது என்று எண்ணிய அந்த இளைஞர்கள், உயிரிழந்த கிரிதரனின் உடலில் பெரிய பாறாங்கல்லை வைத்துக் கட்டி அருகே இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் உடல் நீருக்கு மேல் வந்துவிடக் கூடாது என்று எண்ணிய அந்த கும்பல், அங்கிருந்த தென்னை மரத்தை வெட்டி கிணற்றில் போட்டுள்ளனர். அதேபோல் அங்கிருந்த சில மரக்கிளைகளையும் வெட்டி எடுத்து, கிணற்றில் தண்ணீரே தெரியாத அளவுக்கு போட்டு மறைத்துள்ளனர்.

இந்த நிலையில், தன்னுடைய தம்பி ஜனவரி மாதம் போகிப் பண்டிகையிலிருந்து காணவில்லை என கிரிதனின் உடன் பிறந்த அக்கா கிரிஜா காவல் நிலையத்தில் பிப்ரவரி மாதம் புகார் அளித்துள்ளார். இதனிடையே கடந்த ஒன்றரை மாதமாக அந்தப் பகுதி இளைஞர்கள் மத்தியில், ஒரு நபர் கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்ற தகவல் பரவி உள்ளது.

அதேநேரம் கொலை செய்த இளைஞர்களில் ஒரு சிலர், நாங்கள் எல்லாம் சாதாரண ஆட்கள் இல்லை, கிரிதரனையே கொலை செய்து கிணற்றில் போட்டு விட்டோம் என தங்களுடைய சக நண்பர்களிடம் பேச்சுவாக்கில் உளறியுள்ளனர். இதனை அறிந்த மாவட்ட தனிப்படையினர், ஹரிஸ் என்ற டியோ ஹரியை பிடித்து விசாரணை செய்துள்ளனர்.

இந்த விசாரணையில் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து கிரிதரனை கொலை செய்து கிணற்றில் வீசி மரக்கிளைகளை போட்டு மூடி விட்டோம் என தெரிவித்துள்ளார்.

டியோ ஹரி கொடுத்த தகவலை அடுத்து டிஎஸ்பி ஜூலியர் சீசர் தலைமையில் 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் ஹரியை அழைத்துச் சென்று கொலை செய்த இடத்தைக் காண்பிக்க செய்து கொலையை உறுதி செய்துள்ளனர். அதன் பிறகு டியோ ஹரி கொடுத்த தகவலின் பேரில் ஆகாஷ், பிட்டா என்ற கார்த்திக் மற்றும் தாமோதரன் ஆகியோரையும் கைது செய்து, காவல் துறையினர் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மேலும், அந்த கிணற்றில் தீயணைப்புத்துறை மற்றும் வருவாய்த் துறையினரின் உதவியுடன் சிவகாஞ்சி காவல் துறையினர் தேடியபோது, மண்டைஓடு மற்றும் கால் எலும்பு மட்டுமே கிடைத்துள்ளது. அதனால் கழிவு நீர் உறிஞ்சும் வாகனத்தைக் கொண்டு வந்து கிணற்றில் உள்ள தண்ணீர் முழுவதையும் உறிஞ்சி எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு சில நாளாக விட்டு விட்டுப் பெய்து வரும் மழை காரணமாக அந்த கிணற்றில் நீர் ஊற்று வந்து கொண்டே உள்ளதால் ,உடலின் மற்ற பாகங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அதனால் இந்த பணி இன்றும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. உடன் பழகிய நண்பரையே போதையில் சக நண்பர்கள் கொலை செய்துள்ள சம்பவம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: வேங்கை வயல் விவகாரம்: டிஎன்ஏ பரிசோதனைக்கு 4 சிறுவர்களின் பெற்றோரும் சம்மதம்!

Last Updated : Jul 15, 2023, 11:49 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.