காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பிரபல தனியார் உணவகம் செயல்பட்டுவருகிறது. இந்த உணவகத்திற்கு ஏப்ரல் 9ஆம் தேதி காவல் துறை வாகன ஓட்டுநர் தன்ராஜ் சென்று ரூ.10க்கு சம்பார் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு உணவக ஊழியர்கள் ரூ. 10க்கு சாம்பார் தரஇயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் ஊழியருக்கும் தன்ராஜுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அதைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்கு வந்த காவல் உதவி ஆய்வாளர் ராஜமாணிக்கம் தகுந்த இடைவெளி கடைப்பிடிக்காது உள்ளிட்ட கரோனா தடுப்பு விதிமீறலை காரணம் காட்டி ரூ. 500 அபராதம் வித்தார். அப்போது அங்கு வந்த தன்ராஜ் சாம்பார் கேட்டா கொடுக்கல. இவங்களுக்கு ரூ. 5 ஆயிரம் போடுங்க என்றதும் ராஜமாணிக்கம் உடனே ரூ. 5 ஆயிரம் அபராதம் விதித்தார்.
இந்நிலையில், காவல் துறையினர் கையில் அதிகாரம் உள்ளதால் தன்னிச்சையாக, விதிமீறலில் ஈடுபடுகின்றனர் என்றும் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வியாபாரிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சண்முகப்பிரியாவிடம் புகார் அளித்துள்ளனர்.