தமிழ்நாட்டில் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகப் பல மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அந்த வகையில் கடலோரப் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்று (அக்.05) தொடர் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் காலை முதலே விட்டுவிட்டு சாரல் மழை பெய்து வந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
சாலையில் தேங்கி நிற்கும் மழை நீர்
குறிப்பாக காஞ்சிபுரம் காந்திசாலை, ரங்கசாமிகுளம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம், செவிலிமேடு, ஓரிக்கை, பூக்கடைசத்திரம், வெள்ளைகேட், பொன்னேரிக்கரை, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்டப் பகுதிகளில் அவ்வப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்து வருகிறது.
தொடர்கனமழையின் காரணமாக, காஞ்சிபுரத்தில் பல முக்கிய சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், சாலைகளில் மழை நீர் ஆங்காங்கே தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஒருபுறம் கனமழை பெய்து நீர் நிலைகள் நிரம்புவதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இதையும் படிங்க: தொடர் மழை எதிரொலி: கோவை குற்றாலம் அருவிக்குச் செல்லத் தடை!