காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஜவுளி கடைகளுக்கு ஆவணி மாதம் முதல் முகூர்த்த நாள், வரலட்சுமி விரதம் நாளை முன்னிட்டு பட்டுச் சேலைகள் எடுக்க வெளி மாநிலம், வெளி மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வரத் தொடங்கினர்.
ஒரே நேரத்தில் கடைகளில் குவிந்த வாடிக்கையாளர்கள் தகுந்த இடைவெளியை பின்பற்றவில்லை. மேலும், பட்டுச்சேலை எடுக்க வந்த மக்கள் அங்குள்ள உணவகங்கள் வாசல்களில் நெடுநேரம் காத்து கிடக்கின்றனர்.
தகுந்த இடைவெளியை மறந்த மக்கள்
அனைத்து இடங்களிலும் தகுந்த இடைவெளியை மறந்து பொதுமக்கள் குவிந்துள்ளதால் காஞ்சிபுரம் பகுதியில் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் காந்தி சாலை, காமராஜர் சாலை, ரயில்வே சாலை, மேட்டுத் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கோயிலில் நடந்த திருமணங்கள் - கூட்ட நெரிசலில் இரு வீட்டார் மோதல்