செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகேயுள்ள சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி கருங்குழி பேரூராட்சி உள்ளது. இங்கு 15 வார்டுகள் உள்ளன. பேரூராட்சி செயல் அலுவலராக உள்ள மா.கேசவன் தலைமையில் காந்தி-150 பூங்கா வளாகத்தில் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இந்த சுகாதாரத் திருவிழா நிகழ்ச்சியில் சுகாதரத்தின் முக்கியத்துவம், சுற்றுச்சூழலை துய்மையாக வைத்துக்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மேஜிக் ஷோ, பள்ளிக் குழந்தைகளின் பரதநாட்டியம், கலை நிகழ்ச்சிகள் மற்றும் நாணயக் கண்காட்சி நடைபெற்றன.
பின்னர் சிறந்த முறையில் வீட்டுத் தோட்டம் மற்றும் மாடித் தோட்டம் அமைத்தவர்களுக்கும், தங்கள் வீட்டு குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்துத் தந்தவர்களுக்கும், பேரூராட்சி அலுவலகத்தில் சிறந்த முறையில் பணியாற்றி வருபவர்களுக்கும் பரிசு மற்றும் சான்றுகள் வழங்கப்பட்டன. இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், பொது மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: திருப்பூர்: கொலை வழக்கில் போலி செய்தியாளர் கைது!