காஞ்சிபுரம் அடுத்த கோவிந்தவாடி கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவற்றை கட்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்நிலையில் திடீரென கட்டுமானப் பணி நிறுத்தப்பட்டது. இது தொடர்பாக பலமுறை கல்வி துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அரசு அலுவலர்களின் அலட்சியத்தைக் கண்டித்து கோவிந்தவாடி கிராம மக்களில் ஒருசாரர் இன்று (ஜன.18) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இந்த முற்றுகை போராட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக காவலர்கள் குவிக்கப்பட்டு, கிராமவாசிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர், காஞ்சிபுரம் வருவாய் கோட்டாட்சியர் வித்யாவிடம் பள்ளி கட்டடத்தை விரைந்து கட்டி முடிக்க வலியுறுத்தி கோவிந்தவாடி கிராமத்தினர் கோரிக்கைமனு அளித்தனர்.
இதையும் படிங்க:மருத்துவ படிப்பு முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு 20ஆம் தேதி கல்லூரி!