ETV Bharat / state

கவரிங் நகைகளை அடமானம் வைத்து ரூ.1.64 கோடி மோசடி - வங்கி செயலாளர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் - கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து பணம் மோசடி

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடமானமாக வைத்து கடன் கொடுத்த வகையில் ரூ.1.64 கோடி மோசடி செய்ததாக வங்கியின் செயலர் உள்ளிட்ட 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

கூட்டுறவு வங்கியில் கவரிங் நகைகளை அடமானம் வைத்து பணம் மோசடி

author img

By

Published : Jan 25, 2022, 12:59 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கியில் ம.கலைச்செல்வி(58) செயலாளராகவும், பி.வி.ஜெயஸ்ரீ(51)கண்காணிப்பாளராகவும், ஜெ.விஜயகுமார்(47) நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வந்தனர்.

இவர்கள் மூன்று பேரும் இணைந்து வங்கியின் உறுப்பினர்கள் 21 பேரிடம் கவரிங் நகைகளைப் பெற்றுக்கொண்டு ரூ.1 கோடியே 64 லட்சத்து 83 ஆயிரத்து 500 நகைக்கடன் வழங்கியுள்ளனர்.

கமிஷன் பெறுவதற்காக கடன்கள் வழங்கியிருந்ததை தொடர்ந்து வங்கி தணிக்கை செய்ய வந்த கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி இதனை அறிந்து அதிர்ச்சியடைந்தார்.

இதனையடுத்து சென்னையில் உள்ள வணிக குற்றப்புலனாய்வுப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் பழனிக்குமாரிடம் 3 பேர் மீதும் புகார் செய்தார்.

இது காஞ்சிபுரத்தில் உள்ள வணிககுற்றப் புலனாய்வுப் பிரிவு டி.எஸ்.பி. முரளியிடம் விசாரணைக்கு வந்தது. அவர் நடத்திய விசாரணையில் சுமார் ரூ.1.64 கோடி மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

இதனைத் தொடர்ந்து வங்கியின் செயலாளர் ம.கலைச் செல்வி மற்றும் நகை மதிப்பீட்டாளர் ஜெ.விஜயகுமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பின்னர் இவ்வழக்கில் தொடர்புடைய வங்கிகண்காணிப்பாளரான பி.வி.ஜெயஸ்ரீ தலைமறைவானதால் அவரையும் ஆய்வாளர் தேன்மொழி தலைமையிலான காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இவ்வழக்கு தொடர்பாக காஞ்சிபுரம் வணிக குற்றப்புலானாய்வுப் பிரிவு ஆய்வாளர் தேன்மொழி விரிவான விசாரணையும் மேற்கொண்டு வருகிறார்.

கூட்டுறவு வங்கி
கூட்டுறவு வங்கி

இந்நிலையில் கூட்டுறவு சங்கங்களுக்கான துணைப்பதிவாளர் சுவாதி நகைக்கடன் மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையும் படிங்க: 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கட்டாயம் - அமைச்சர் அன்பில் மகேஷ்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.