பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 80ஆவது பிறந்தநாளை முத்து விழாவாக காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் நேற்று அக்கட்சி பொறுப்பாளர்கள் கொண்டாடினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வந்தவாசி துரை, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் திருக்கச்சூர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய திருக்கச்சூர் ஆறுமுகம், "பாமக தொடங்கப்பட்டு 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி இணைந்திருந்து கூட்டணி மட்டும்தான் தமிழ்நாட்டில் இதுவரையிலும் வெற்றிபெற்றிருக்கிறது. கூடிய விரைவில் அன்புமணி முதலமைச்சராக பதவியேற்பார்.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதிகப்படியான இட ஒதுக்கீட்டை பெற்றுக் கொடுத்த ஒரே தலைவர் ராமதாஸ்" எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அக்கட்சியின் தொண்டர்கள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.