ETV Bharat / state

ஊழல் இல்லா ஒரே ஆட்சி அதிமுக ஆட்சிதான் - எடப்பாடி பழனிசாமி - mercenary chief

காஞ்சிபுரம்: ஊழல் இல்லா ஒரே ஆட்சி அதிமுக ஆட்சிதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Mar 27, 2019, 7:24 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் இன்று அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, திமுக தலைவராக இருக்கும் ஸ்டாலின் முதலில் செயல் தலைவராக இருந்தார். பிறகு கட்சித் தலைவராக ஆனார்.

கழகத் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டதும், தற்போது முதலமைச்சர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார். அதுமட்டுமில்லாமல் தற்போது கூலிப்படைக்கு தலைவராக மாறி இருக்கிறார். இதைவிட ஒரு அவப்பெயர் அக்கட்சிக்கு தேவை இல்லை. அப்படிப்பட்ட ஆட்சி தான் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.

மேலும் மோடியால் மட்டும் தான் தமிழகத்திற்கு ஒரு நல்ல பாதையை கொண்டுவர முடியும். எனவே அவரை மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும், அதற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டார்.

Intro:காஞ்சிபுரம் மாவட்டம் அருகே திருக்கழுக்குன்றத்தில் இன்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் திருக்கழுக்குன்றத்தில் நடக்க இருக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

Body:ஊழல் செய்து ஆட்சியை நடத்துகிறோம் என்று எதிர்க்கட்சி தலைவர் அவர்கள் தற்போது பிரச்சாரம் செய்து வருகிறார் இதிலிருந்து நாங்கள் ஊழல் செய்தோம் என்று அவர் குறிப்பிட்டுச் சொல்லி இருந்தால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம் குறிப்பாக சொல்லப்போனால் ஊழல் இல்லாத ஒரே கட்சி அதிமுக நடத்தும் இந்த ஆட்சி தான் என்று எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கூறினார்
திமுக கட்சி தலைவருமான ஸ்டாலின் அவர்கள் முதலில் செயல் தலைவராக இருந்தார் பிறகு கட்சித் தலைவராக ஆனார் கழகத் தலைமை பொறுப்பை ஏற்றுக்கொண்டு தற்போது முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படுகிறார் அதுமட்டுமில்லாமல் தற்போது ஒரு கூலிப் படைக்கு தலைவராக மாறி இருக்கிறார் இதைவிட ஒரு அவர் பெயர் அக்கட்சிக்கு தேவை இல்லை இந்த ஆட்சி தான் உங்களுக்கு வேண்டுமென்றால் உங்களை யாராலும் காப்பாற்ற முடியாது.
2016 அன்று நடந்த சட்டமன்றத் தேர்தலின்போது வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அறிக்கையில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணைகள் கட்டுவதாக தீர்மானம் போடப்பட்டது அதில் தற்போது இரண்டு தடுப்பணைகள் கட்டுவதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன மேலும் ஐந்து தடுப்பணைகள் கூடிய விரைவில் கட்டி விவசாயத்திற்கு தேவையான நீரை தேக்கம் செய்து விவசாயத்தை பெருக்க அதிமுகவால் மட்டுமே முடியும் எனவே மோடி அவர்களால் மட்டும் தான் தமிழகத்தின் ஒரு நல்ல பாதையை கொண்டுவர முடியும் என்றும் அவரை மீண்டும் பிரதமராக வேண்டும் என்றும் அவரை பிரதமராக்க வேண்டும் என்றால் நாடாளுமன்ற தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தில் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து ஆதரிப்பீர்கள் என்று கேட்டுக்கொண்டார்

Conclusion:1996 லிருந்து கிளைச் செயலாளராக இருந்து படிப்படியாக ஒன்றியம் மாவட்டம் மாநிலம் போன்ற பதவிகளை வகித்து பிறகு அமைச்சராக பதவி ஏற்று இப்போது நான் முதலமைச்சராக பதவி வைக்கிறேன் படிப்படியாக இக்கட்சியில் வளர்ந்து அடிமட்ட தொண்டன் ஆக இருந்து முதலமைச்சரான சாதனை அண்ணா திமுகவை மட்டுமே முடியும் எனவே அம்மாவின் ஆட்சி மக்களாட்சி என்றும் அதை மறுபடியும் வளரச் செய்ய இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.