ETV Bharat / state

கிராமப்புறங்களுக்கு புல்லட்டில் சென்று வாக்குச் சேகரித்த திமுக வேட்பாளர்

காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளுக்கு காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் புல்லட்டில் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் வாக்குச் சேகரித்த அவருக்கு வழியெங்கும் பொதுமக்கள், கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கிராமப்புற பகுதிக்கு புல்லட்டில் சென்று வாக்கு சேகரித்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்

author img

By

Published : Mar 23, 2021, 5:36 PM IST

திமுக மாநில மாணவரணிச் செயலாளரான சி.வி.எம்.பி. எழிலரசன் இரண்டாம் முறையாக காஞ்சிபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு திமுக சார்பில் போட்டியிடுகிறார். அதையொட்டி, தொகுதியின் பல்வேறு பகுதியில் சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவருகிறார்.

கிராமப்புறப் பகுதிகளுக்கு புல்லட்டில் சென்று வாக்குச் சேகரித்த காஞ்சிபுரம் தொகுதி திமுக வேட்பாளர்

அதனடிபடையில், இன்று காஞ்சிபுரம் ஒன்றியத்திற்குள்பட்ட தாமல், திருப்புக்குழி, மேல்ஒட்டிவாக்கம், முசரவாக்கம், கிளார், பெரும்பாக்கம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமப்புறப் பகுதிகளுக்கு புல்லட் வாகனத்தில் சென்ற காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் கூட்டணிக் கட்சியினருடன் வீடு வீடாகச் சென்று தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வருகின்ற ஜூன் 3ஆம் தேதி அன்று திமுக ஆட்சிக்கு வந்ததும் கரோனா நிவாரண நிதியாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 நிவாரண தொகையாக வழங்கப்படும் என்றும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி கொண்டுவரப்படும் எனவும், நெசவாளர்களுக்குப் பல சலுகைகளைச் செய்து தருவோம் என்று உறுதியளித்து தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், வாக்குச் சேகரிக்க வந்த அவருக்கு வழியெங்கும் பொதுமக்கள், கூட்டணிக் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பின் போது விசிக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: வாக்குறுதிகள் காகிதத்தில் தேங்காமல் களத்திற்கு வர வேண்டும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.