காஞ்சிபுரம்: வாலாஜாபாத் அருகே தேவரியம்பாக்கத்தில் உள்ள சிலிண்டர் குடோனில் நேற்று மாலை நடந்த பயங்கர தீ ஏற்பட்டது.
இந்த விபத்தில் கேஸ் குடோன் உரிமையாளர் ஜீவானந்தம், உரிமையாளர் மகள் சந்தியா (வயது 21), பூஜா (19), கிஷோர் (13), கோகுல் (22), அருண் (22), குணால் (22), சந்தியா (21), சக்திவேல் (32) , நிவேதா (21), தமிழரசன் (10), சண்முகப்பிரியன், ஆமோத்குமார் என மொத்தம் 12 பேரும் 50% முதல் 100% தீக்காயங்களுடன் படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து அனைவரும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தற்போது உரிமையாளர் ஜீவானந்தம், பூஜா , அருண் , சந்தியா , குணால் ஆகியயோர் 100% தீக்காயங்களுடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கிஷோர் , கோகுல் , சக்திவேல் , நிவேதா , தமிழரசன் , சண்முகப்பிரியன் ஆகியோர் 30% முதல் 50% தீக்காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 50% தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அமோத்குமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
100% தீக்காயமடைந்த உரிமையாளர் ஜீவானந்தத்தின் மகள் சந்தியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதனால் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: வாலாஜாபாத் கேஸ் சிலிண்டர் குடோன் தீ விபத்து நடந்தது எப்படி...? கொஞ்சம் விட்டா ஊரே காலி..!