ETV Bharat / state

மழையால் காஞ்சிபுரத்தில் அறுவடைக்குத் தயாராக இருந்த 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதம்! - kancheepuram

Michaung Cyclone: காஞ்சிபுரம் மாவட்டத்தில், மிக்ஜாம் புயல் மற்றும் தொடர்ந்து பெய்த கனமழையால் அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Michaung Cyclone
மிக்ஜாம் புயல்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 10:40 PM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையின் தாக்கத்தால், அறுவடைக்குத் தயார் நிலையில் இருந்த சுமார் 7 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் சேதமடைந்து இருப்பதாக விவசாயிகள், மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகள் தங்களுக்கு தமிழக அரசு உரிய நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட விவசாயிகள் சங்கச் செயலாளர் கே.நேரு, “பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில், கனமழை காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் அழுகி முளைத்து விடும் நிலையில் உள்ளன. எனவே, பாதிக்கப்பட்ட நெற்பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம், கால்நடை இறப்பு ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம், காய்கறி பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் வீதம் உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

காஞ்சிபுரத்தில் 3 ஆயிரம் ஏக்கர், ஸ்ரீபெரும்புதூரில் 1500 ஏக்கர், வாலாஜாபாத்தில் 1600 ஏக்கர், உத்திரமேரூரில் 350 ஏக்கர், குன்றத்தூரில் 600 ஏக்கர் என மொத்தம் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் அறுவடைக்குத் தயாராக இருந்த நிலையில் மிக்ஜாம் புயலால் வெள்ளத்தில் முழ்கி பாழாகிவிட்டது.

பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் மற்றும் விவசாயிகள் குறித்து அரசு கணக்கெடுப்பு நடத்தி, உண்மையான நிலவரத்தைப் பதிவு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். இது குறித்து ஆட்சியரிடமும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது” எனக் கூறினார்.

ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் மொத்தம் உள்ள 909 ஏரிகளில் 639 ஏரிகள் 100 சதவிகிதமும், 101 ஏரிகள் 76 முதல் 99 சதவிகிதமும், 112 ஏரிகள் 51 முதல் 75 சதவிகிதமும் நிரம்பி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: "நேரு செய்த இரண்டு பெரிய தவறுகளால் ஜம்மு காஷ்மீருக்கு பாதிப்பு" - அமித் ஷா குற்றச்சாட்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.