காஞ்சிபுரம் மாவட்டம், சின்ன காஞ்சிபுரம் வரதப்பா நகரைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (54). இவருக்கு கரோனா நோய்த்தொற்று ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக காஞ்சிபுரம் அருகில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இவர் சிகிச்சைப் பெற்று வந்தார்.
![suicide](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/11747415_suc.jpg)
இந்த நிலையில், கரோனா காரணமாக ஏற்பட்ட மன உளைச்சலால், கோபாலகிருஷ்ணன் மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் மூன்றாவது மாடிக்குச் சென்று அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காஞ்சிபுரம் காவல் துறையினர் கோபாலகிருஷ்ணனின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்தத் தற்கொலை குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.