காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காட்ராம்பாக்கத்தில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜந்து முர்ரா (24) என்பவர் தனது சகோதரனுடன் தங்கி, தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் அவர் கடுமையான வயிற்று வலி காரணமாக ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்து குணமடைந்து வீடு திரும்பினார்.
அதையடுத்து நேற்றிரவு மீண்டும் அவருக்கு வயிற்று வலி ஏற்படவே, அவரை அருகிலிருந்தவர்கள் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
தகவலறிந்த சோமமங்கலம் காவல் துறையினர் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்கு அனுப்பிவைத்தனர்.
அவரது ரத்த மாதிரிகள் கரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே ஆறு வடமாநிலத்தவர்கள் வயிற்றுவலி காரணமாக உயிரிழந்துள்ள நிலையில் மேலும் ஒருவர் வயிற்றுவலியால் உயிரிழந்திருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: சொந்த ஊருக்கு செல்ல கோவையில் காத்திருக்கும் வட மாநில மக்கள்!