காஞ்சிபுரம்: மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்றுக் கொண்ட மருத்துவர் எம்.ஆர்த்தி, “பொதுமக்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும் வகையில் கரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ள வேண்டும்” என வேண்டுகோள் விடுத்தார்.
பின்னர் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காவல் துறை சமுதாயக் கூடத்தில் கலந்துகொண்டார். அங்கு காவல் துறை குடும்பங்களுக்கு, காஞ்சிபுரம் பெரு நகராட்சி சார்பில் நடைபெற்ற இலவச கரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வுசெய்து, தடுப்பூசி போடும் பணியைத் தொடங்கிவைத்தார்.
பின்னர் காவல் துறையினரின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சுதாகர முன்னிலையில் சமுதாயக்கூட வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் மாவட்ட ஆட்சியர் எம். ஆர்த்தி நட்டுவைத்தார்.
இந்நிகழ்ச்சியில் காவல்துறை ஏடிஎஸ்பி ஜெயராமன், டிஎஸ்பி மணிமேகலை, நகர் நல அலுவலர் முத்து, காவல் துறையினர் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'தண்ணியைக் குடி' - ரொனால்டோவின் மாஸ் பதிலால் சரிவைச் சந்தித்த கோகோ கோலா