ETV Bharat / state

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

காஞ்சிபுரம்: தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (மே.26) தொடங்கி வைத்தார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!
கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!
author img

By

Published : May 26, 2021, 8:15 PM IST

Updated : May 26, 2021, 9:30 PM IST

காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடத்தில் டைம்லர் (Daimler) தொழிற்சாலை உள்ளது. இங்கு டிராக்டர், பேருந்து, லாரி போன்ற வாகனங்கள் 12 ஆண்டுகளாக உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இந்த தொழிற்சாலையில் 4 ஆயிரத்து 500 நிரந்தர ஊழியர்கள், ஆயிரத்து 500 தற்காலிக ஊழியர்கள் உள்ளனர்.

இன்று (மே.26) இந்த தொழிற்சாலையில் 18 வயது முதல் 44 வயது உடைய தொழிலாளர்கள் 200 பேருக்குக் கரோனா தடுப்பூசியின் முதல் டோஸ் போடும் பணியைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் தொழிற்சாலையில் உற்பத்தியாகும் வாகனங்களையும் பார்வையிட்டார்.

கரோனா தடுப்பூசி செலுத்தும் பணியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்!

இந்த ஆய்வின் போது ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும் - முதலமைச்சர்

Last Updated : May 26, 2021, 9:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.