காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே குண்டு பெரும்பேடு ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளது. இதன் மூலம் அப்பகுதியில் 448 ஏக்கர் விவசாய நிலங்கள் பயனடைவதுடன் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. பல ஆண்டுகளாக ஏரிகள் தூர் வாராமல் இருந்ததால் கால்வாய்கள் உள்ளிட்டவை முழுவதுமாக சேதம் அடைந்து உள்ளன.
இதனால் ஆண்டுதோறும் மழை காலங்களில் பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாக வெளியேறுகிறது. இந்நிலையில் ஏரிகளை குடிமராமத்து பணியின் மூலம் சீரமைக்க அரசு 89.26 லட்சம் நிதி ஒதுக்கியுள்ளது. இதற்காக உள்ளூர் விவசாயிகள் மூலம் சங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் குடிமராமத்து பணிகளை குண்டு பெரும்பேடு கூட்டுறவு சங்க தலைவர் எஸ். ரவி, விவசாய சங்கத் தலைவர் மல்லிகா முத்து, துணைத் தலைவர் ஆர். மோகன், செயலாளர் சி. சந்திரன், துணை செயலாளர் எண். தவமணி அம்மாள், பொருளாளர் எஸ். தேவ கருணை உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு சென்று வருகின்றனர். 40 வருடங்களுக்கு பிறகு ஏரிகள் சுத்தம் செய்யப்படுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: திருவாரூரில் குடிமராமத்துப் பணிகள் 80 விழுக்காடு நிறைவு!