காஞ்சிபுரத்தில் பிரபல ஜவுளிகடை ஒன்றில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள் எடுக்க மக்கள் குவிந்தனர். இந்நிலையில் அந்த கடைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து காவல் துறையினர் கடையில் இருந்த பொதுமக்களை வெளியேற்றி வெடிகுண்டை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
வருகிற நவ 12ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கத்திற்கு மாறாக அந்த கடையில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டு உள்ளது.
கடையில் கூட்டம் அதிகரித்து இருந்த நிலையில், கடை உரிமையாளருக்கு தொலபேசி மூலம் மர்ம நபர்கள் கடையில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து கடை உரிமையாளர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார். தகவலறிந்து பிரபல ஜவுளிக்கடைக்குச் சென்ற காவல் துறையினர், கடையில் இருந்த வாடிக்கையாளர்கள், கடை உரிமையாளர்கள் ஆகிய அனைவரையும் வெளியேற்றி சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல் துணைக் கண்காணிப்பாளர் ஜூலியட் சீசர் தலைமையில் 3 வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய குழுவினர் அந்தக் கடையில் சோதனை நடத்தினர். மேலும் அங்கிருந்த பொதுமக்கள் என அனைவரையும் 200 மீட்டர் தூரத்திற்கு வெளியேற்றிய போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவர சோதனையில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள வணிகர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி காதல் திருமணம் தம்பதி படுகொலை வழக்கில் மேலும் 2 பேர் சரணடைந்தனர்