போகிப் பண்டிகையான இன்று வீட்டில் உள்ள பழைய பொருட்களையும், வேண்டாத பொருட்களையும் மக்கள் தீயிட்டு கொளுத்துவர். அதை போல, நாட்டிற்கு வேண்டாத விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை தீயிட்டு கொளுத்துவோம் என்ற அறைகூவலை டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் ஒருங்கிணைப்புக்குழு விடுத்திருந்தது.
அதனடிப்படையில், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களிலும் இன்று காலை வேளாண் சட்ட நகல்கள் எரிக்கப்பட்டன. காஞ்சிபுரம், வாலாஜாபாத், உத்திரமேரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வேளாண் சட்ட நகல்களை விவசாயிகள் அவரவர் வீடுகளில் போகியில் எரித்தனர். மேலும் மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: சிக்கன் ரைஸால் கைதான பாஜக பாய்ஸ்