17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக சுற்றுச் சுவரில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால் ஆகியோரின் உருவப்படங்கள் கொண்ட பேனர் வைக்கப்பட்டிருந்தது. அதில் அவர்களை துரோகிகள் என விமர்சித்து பல்வேறு காரணங்கள் எழுதி வைக்கப்பட்டிருந்தன. அதிக மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் இடம் என்பதால் பொதுமக்கள் கவனிக்கும் வகையில் இந்த பேனர் வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்து வந்த அதிமுக நிர்வாகிகள் உடனடியாக பேனரை அப்புறப்படுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
'ஓபிஎஸ்-இபிஎஸ் துரோகிகள்!' - ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பேனர்! - banner against cm and deputy cm
காஞ்சிபுரம்: முதலமைச்சர் எடப்பாடி, துணை முதலமைச்சர் ஓபிஎஸ், சபாநாயகர் தனபால் ஆகியோரை துரோகிகள் என விமர்சித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியே வைக்கப்பட்டிருந்த பேனரால் சலசலப்பு ஏற்பட்டது.