ETV Bharat / state

போலி ஏடிஎம் அட்டை வழங்கி நூதன முறையில் விவசாயியை ஏமாற்றிய இளைஞர் கைது! - காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

காஞ்சியில் போலி ஏடிஎம் அட்டை வழங்கி, நூதன முறையில் விவசாயியை ஏமாற்றி ரூ.40,000 பணத்தை எடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 ஏடிஎம் அட்டைகள், ரூ. 36,500 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டன

போலி ஏடிஎம் அட்டை வழங்கி விவசாயியை ஏமாற்றிய இளைஞர் கைது

author img

By

Published : Jan 25, 2021, 5:22 AM IST

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அருகே திம்மசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரன் (53), விவசாயி. இவர் கடந்த 16ஆம் தேதி தனது வங்கி கணக்கிலிருந்து பணம் எடுப்பதற்காக காஞ்சிபுரம் அன்னை இந்திரா காந்தி சாலையிலுள்ள ஒரு ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளார். ஏடிஎம் இயந்திரத்தில் சந்திரனுக்கு பணம் எடுக்க தெரியாததால், அருகில் நின்றிருந்த ஒரு நபரிடம் பணம் எடுத்து தருமாறு கூறி தனது ஏடிஎம் அட்டையை கொடுத்துள்ளார்.

அறிமுகம் இல்லாத அந்த நபர் பணம் எடுப்பது போல் நாடகமாடி பணம் வரவில்லை என்று கூறி, ஒரு போலியான ஏடிஎம் அட்டையை சந்திரனிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து வீட்டிற்கு சென்ற சந்திரனுக்கு, அவரது உண்மையான ஏடிஎம் அட்டையை பயன்படுத்தி, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ. 40 ஆயிரம் எடுக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்து உடனடியாக சந்திரன் பெரிய காஞ்சிபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தார்.

அந்தநிலையில் ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, அரசு காத்தம்மன் கோயில் எதிரில் உள்ள ஏடிஎம் மையத்தில் சந்தேகப்படும் படியாக நின்றிருந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று, காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அந்த நபர் தக்கோலம் பழனியப்பன் கோயில் தெருவைச் சேர்ந்த ஏழுமலை வயது (26) என்பதும், விவசாயி சந்திரன் ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி ரூ.40,000 எடுத்ததும் தெரியவந்தது. இதனையடுத்து ஏழுமலையை கைது செய்த காவல்துறையினர், அவரிடமிருந்து, 11 ஏடிஎம் அட்டைகள், திருடிய பணத்திலிருந்து ரூ.36,500 ரொக்கம், இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஏழுமலையை காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் முன்னிறுத்தி, சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: குழந்தைகளை ஆசீர்வதிக்க கூறி மூதாட்டியிடம் 3 தங்க மோதிரங்கள் அபேஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.