காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஒரகடம் பகுதியில் பொதுப்பணித் துறையின் பராமரிப்பில், பெரிய ஏரி உள்ளது. 300 ஏக்கர் பரப்புள்ள இந்த ஏரி மூலம் ஆயிரத்து 500 ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டுவருகிறது.
இந்நிலையில், இந்த ஏரியின் நீர்ப்பிடிப்புப் பகுதியை அருகே உள்ள தனியார் நிறுவனம் ஆக்கிரமித்து, விவசாயம் செய்துவருவதாகக் கூறப்படுகிறது. நேற்று அப்பகுதியில் 3 டிராக்டர், ஒரு ஜே.சி.பி. இயந்திரம் மூலம் ஏர் உழுது, நடவுப் பணி செய்துவந்தனர்.
இதையறிந்த ஒரகடம் பொதுமக்கள் அங்கு சென்று, ஏரியை ஆக்கிரமித்து விவசாயம் செய்யப்படுவதாக பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்து பணியை நிறுத்தி முற்றுகையிட்டனர். பின், இது குறித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு புகாரளிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது 'தீக்குளிப்பேன்' என மிரட்டிய பெண் - நடந்தது என்ன?