காஞ்சிபுரம் மாநகராட்சி வேதாச்சலம் நகர் பகுதியில் வசிப்பவர்கள் சுதாகர் - ஹேமலதா தம்பதிர். இவர்களுக்கு இரண்டரை வயதில் யஷ்வந்த் என்ற மகன் உள்ளான். யஷ்வந்த், தனது ஆர்வத்தாலும், பெற்றோர்களின் உதவியாலும், ராணுவத்திலும் விமானிகளும் பயன்படுத்தக்கூடிய 26 சங்கேத குறியீடு வார்த்தைகளை, 36 நொடிகளில் தெரிவித்து அசத்தியுள்ளான்.
இந்த சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், ஏசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் என்று இரண்டு சாதனை புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு கலாம் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்தில் 42 தலைப்புகளை கூறியும், 17 நொடிகளில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை வரைபடத்தில் சுட்டிக்காட்டியும் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி குழந்தையை ஊக்கப்படுத்தும் விதமாக யஷ்வந்தையும், அவரது பெற்றோரையும் நேரில் அழைத்து பாராட்டி, பரிசுகளை வழங்கினார்.
இதையும் படிங்க: தேசிய விளையாட்டு தினத்தில் ஹாக்கி வீரர் தியான் சந்துக்கு பிரதமர் புகழாரம்