காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (டிச. 04) இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில் காஞ்சிபுரம் அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் அதனைச் சரிசெய்ய காஞ்சிபுரம் பருத்தி குளத்தைச் சேர்ந்த மின்சார ஊழியர் பாக்கியநாதன் (40), அவருக்கு உதவியாகச் சென்ற ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த தயாளன் (36) ஆகிய இருவரும் எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்.
உயிரிழந்த இருவருக்கும் மனைவி, 2 பெண்கள் குழந்தைகள் உள்ளனர். இது குறித்து தகவலறிந்த பாலுச்செட்டிசத்திரம் காவல் துறையினர் உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் நேற்று இரவு மட்டும் 41.37 செ.மீ. மழைப்பதிவு!