கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையிலுள்ள ரயில் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கிரண் குராலா கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து பயணிகளுக்கு விளக்கமளித்தார்.
இதனை தொடர்ந்து ரயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், அங்குள்ள அதிகாரிகளிடம் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை குறித்து செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.
உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் பேருந்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், பயணிகளிடம் கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்த துண்டுபிரசுரங்களை கிரண் வழங்கினார். இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தின் பல்வேறு பகுதிகளில் அவர் ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படிங்க: இருசக்கர வாகன விபத்து - லாரியில் சிக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு