கள்ளக்குறிச்சி: அடுத்து கணியாமூர் தனியார் மேல்நிலைப் பள்ளியில் மாணவி மரணம் தொடர்பாக நடந்த கலவரங்கள் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தக் கலவரத்தின் போது பள்ளிக்கு சொந்தமான பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதனை மீட்கும் பனியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தனியார் பள்ளி வளாகத்தில் மாட்டு பண்ணை பொறுப்பாளரை மிரட்டி மாடுகளை திருடி சென்ற சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த பூவரசன்(27), மணிகண்டன்(35), ஆதிசக்தி (18) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர். கலவரம் நடந்தபோது கைப்பற்றப்பட்ட வீடியோ காட்சியின் அடிப்படையில் அடையாளம் கண்டு மூவரை தனிப்படை போலீசாரால் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் கைது: ஆகஸ்ட் 26 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்