கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும்பொருட்டு தமிழ்நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. இந்நிலையில் திருக்கோவிலூர் மேல வீதியில் தடை உத்தரவை மீறி மறைமுகமாக ஸ்ரீ லஷ்மி என்னும் துணிக்கடை வியாபாரம் செய்வதாக மண்டல தனி வட்டாட்சியர், குடும்ப பாதுகாப்பு அலுவலருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, மறைமுகமாக இயங்கிய துணிக்கடைக்கு காவல் துறையினர், வருவாய் ஆய்வாளர்கள் முன்னிலையில் சீல்வைக்கப்பட்டது.
இதையும் பார்க்க: உதவிசெய்ய மனம் இருந்தால் வறுமை தடையில்லை!