கள்ளக்குறிச்சி: கோட்டைமேடு பகுதியினை சேர்ந்த கீரி பாண்டு - கௌரி இவர்களின் மகனான அறிவழகனுக்கு கடந்த 13ஆம் தேதி திருமணம் நடந்துள்ளது. இந்த திருமணம் கோயிலிலும், திருமண வரவேற்பு நிகழ்வு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் திருமண மண்டபத்திலும் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் அறிவழகன்- மதி இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்விற்கு கலந்து கொண்ட மாப்பிள்ளையின் நண்பர்கள், மறைந்து போன அறிவழகன் தந்தையை பேனராக அச்சடித்து அறிவழகனுக்குப் பரிசாக வழங்கியுள்ளனர். பேனரில் உள்ள தந்தை முகத்தைப் பார்த்த அறிவழகன் சற்றும் எதிர்பார்க்காமல் தேம்பி தேம்பி அழுத காட்சி பார்ப்போரை நெகிழச் செய்தது.
மேலும் தனது திருமணத்திற்கு நண்பர்களின் வடிவில் தந்தையே வந்து ஆசீர்வாதித்துள்ளார் என அறிவழகன் நண்பர்களை பாராட்டி மகிழ்ந்தார். மேலும் இந்தச் சம்பவங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கணியாமூர் பள்ளி கலவரம் - நான்கு பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது!