கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த எம். குன்னத்தூர் கிராமத்தில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் அங்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று (மே 30) முதல் நடைப்பெற்று வருகின்றன. இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ள அப்பகுதி மக்கள் யாரும் முன்வரவில்லை.
எனவே, மக்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக அக்கராமத்தின் இளைஞர் தம்பிதுரை தடுப்பூசி போடும் நபர்களுக்கு பரிசு பொருள்கள் வழங்குவதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து மக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொண்டு பரிசுப்பொருள்களை வாங்கிச்சென்றனர். பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இந்தச்செயலை செய்யும் தம்பிதுரைையை மருத்துவர்களும், சமூக ஆர்வலர்களும் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.