கள்ளக்குறிச்சி: தனியார் மண்டபத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை சார்பில் மூன்று நாள்கள் விவசாய கண்காட்சி நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில் நோய் எதிர்ப்புச் சக்தி ஆற்றல் பெறக்கூடிய அளவிற்கு உள்ள பாரம்பரிய நெல் விதைகளைப் பயிரிட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டுமென நெல் ஜெயராமன் பாதுகாப்பு மைய உயர்மட்ட குழு நிர்வாகி அசோகன் பேட்டியளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சிக்கு நெல் ஜெயராமன் பாதுகாப்பு மையம் உயர்மட்டக்குழு நிர்வாகி அசோகன் தலைமை தாங்கி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கிவைத்தார். பின்னர் 174 ரக நெல் வகையினை எடுத்துரைத்தார். மேலும் பாரம்பரியமான நெல் வகைகளைப் பயிரிட்டு விவசாயிகள் உண்ண வேண்டும் என விவசாயிகளிடத்தில் கேட்டுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து அங்கு உள்ள சொட்டுநீர், இயற்கை மற்றும் பாரம்பரிய விதைகள், நவீன வேளாண் கருவிகள், இயற்கை உரங்கள் மற்றும் ஆர்கானிக் பயிர் விளைவிக்கும் முறைகள் குறித்த பயிற்சி அரங்கம், கறவை மாடுகள் பால் அபிவிருத்தி தொடர்பான அரங்குகள் உள்பட 100 அரங்குகள் விவசாயிகளுக்காக அமைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு அரங்கிலும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் நின்று மக்களிடம் விளக்கி எடுத்துக்கூறி விவசாய மேம்பாட்டிற்காகக் கருவிகளையும் செய்முறையாகச் செய்து காட்டினார்கள். இதை ஆர்வமுடன் விவசாயிகள், பொதுமக்களும் கண்டுகளித்து வருகின்றனர்.
மேலும் மூன்று நாள்கள் இந்தக் கண்காட்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து செய்தியாளர் இடையே பேசிய நெல் ஜெயராமன் பாதுகாப்பு மைய உயர்மட்டக்குழு நிர்வாகி அசோகன் நோய் எதிர்ப்புச் சக்தி ஆற்றல் வரக்கூடிய அளவிற்கு உள்ள பாரம்பரிய நெல் விதைகளைப் பயிரிட்டு விவசாயிகள் பயன்பெற வேண்டுமென கேட்டுக்கொண்டனர்.
இதையும் படிங்க: டிங்குடி டிங்காலே... ஸ்டாலின் ஆட்சி டிங்குடி டிங்காலே! - ஜெயக்குமாரின் கலகல கண்டன உரை!