தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் படிப்படியாக அதிகரித்துவருகிறது. இந்த நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகே உள்ள ஏமப்பேர் பகுதியில் நேற்று மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்தது. இதையடுத்து, இவர்கள் மூவரும் விழுப்புரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ஏமப்பேர் பகுதியில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீ காந்த் இன்று திடீரென ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது சாலையில் அவ்வழியாக தேவையில்லாமல் வந்த இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார். மேலும் அத்தியவாசிய பொருள்களை வாங்கிச் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அவர் அறிவுரைகளையும் கூறினார்.
இதையும் படிங்க: தினக்கூலி தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கிய எம்எல்ஏ