ETV Bharat / state

கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு! - kallakurichi district news

கள்ளக்குறிச்சி : உளுந்தூர்பேட்டையில் கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Student drowns while bathing in well
Student drowns while bathing in well
author img

By

Published : Apr 22, 2021, 11:49 AM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை விகேஎஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டர் ரமேஷ். இவரது மகன் ராகுல். இவர் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார். கரோனா நோய் தொற்று காரணமாக கல்லூரிகள் விடுமுறை அளிக்கப்பட்டு வரும் சூழ்நிலையில், ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ராகுல் நேற்று (ஏப்.21) மதியம் வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் மாலை 3 மணிக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றுள்ளார். அப்போது ராகுல் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்க, உடன் இருந்த நண்பர்கள் ராகுலை காப்பாற்ற முயற்சி செய்தும் முடியவில்லை.

உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவலின் பேரில் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், காவல்துறையினர் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி இரவு 8.30 மணியளவில் ராகுல் உடலை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:

ஆதரவற்ற மக்களுக்காக தொடங்கப்பட்ட "காவல் கரங்கள்"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.