தமிழ்நாட்டில் நேற்று விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மூவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யபட்டது. விசாரித்ததில் அவர்கள் டெல்லி சென்று திரும்பியது தெரியவந்தது.
எனவே இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருந்து டெல்லி சென்றவர்களின் விவரம் உடனடியாக சேகரிக்கபட்டு, நேற்று மாலை முதல் அவர்களை தனிமைப்படுத்தும் பணியில், சுகாதாரத் துறை ஈடுபட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக, 6 பேரை சுகாதாரத் துறையினர் அடையாளம் கண்டு, அவர்களை கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் வைத்து கண்காணித்து வருகின்றனர்.