சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மையப்பகுதியாக உள்ளது, உளுந்தூர்பேட்டை. இந்நிலையில் உளுந்தூர்பேட்டை அடுத்த செங்குறிச்சியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியில் பணியாற்றும் 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஊதிய உயர்வு வேண்டும், ஊழியர்களுக்குப் பிடித்தம் செய்யப்பட்டுள்ள அனைத்து வகையான ஊதியத்தையும் வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சுங்கச்சாவடி ஊழியர்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்று(அக்.19) இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திருமாந்துறை டோல்கேட்டில் காலை முதலே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தின்போதும் சுங்கச்சாவடி ஊழியர்களின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத சூழ்நிலையில், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், தங்களின் பணிகளைப் புறக்கணித்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனையடுத்து சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள் சுங்கச்சாவடியில் இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: தட்டார்மடம் வியாபாரி கொலை வழக்கு: காவல் ஆய்வாளரை கைது செய்ய கோரிக்கை